#Breaking மனைவியுடன் தகராறு; நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு கணவன் தற்கொலை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கண்ணதாசன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலைக்கு உட்பட்ட அஞ்சு குன்னு பகுதியில் வசித்து வந்த 45 வயதான கண்ணதாசனுக்கும், அவரது மனைக்கும் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.

குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணதாசன், வீட்டில் தான் மறைத்து வைத்திருந்த SBBL நாட்டு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர் நாட்டுத் துப்பாக்கி எதற்காக வைத்திருந்தார் என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட நபரின் உடல் தற்பொழுது கூடலூர் அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு செய்வதற்காக வைக்கப்பட்டு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.