மற்ற மாநிலங்களை விட தமிழக சற்று முன்னேறிக் கொண்டுதான் காணப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் அனைத்து விதமான தொழில் வளமும் அதிகரித்துள்ளது. மேலும் போக்குவரத்து சேவைகளும் ஏராளமாக வந்துள்ளன. அதிலும் குறிப்பாக விமான போக்குவரத்து துறையில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதாக காணப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
அதன்படி தமிழகத்தின் குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் விமான சேவைக்கு அனுமதி கோரி துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார் .விமான சேவைக்கு அனுமதி கோரி துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் இந்திய ஒன்றிய அமைச்சர் சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன்படி துபாயிலிருந்து திருச்சி, கோயம்புத்தூர், கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். துபாயில் இருந்து இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உள்பட 9 நகரங்களுக்கு விமான சேவை இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி, கோவை, கண்ணூர், கோவா ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறது. துபாயில் இருந்து இந்தியாவுக்கு வாரத்துக்கு 183 விமான சேவை இருந்து வருகிறது.
2014 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி தற்போது 65,200 விமான இருக்கைகள் உள்ளன என்ற கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியா துபாய் இடையேயான விமான சேவை நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.
சரக்கு விமான போக்குவரத்து மூலம் இரண்டு நாடுகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது என துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் கூறியுள்ளார்.