மீண்டும் அதிர்ச்சி! துபாயிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 2 விமான பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒமைக்ரானின் உருமாற்றம் அடைந்த BF.7 வகை கொரோனாவானது சீனா, ஜப்பான், தைவான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதிர்ச்சி! துபாயிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இந்நிலையில, துபாயில் இருந்து தமிழகம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள 2 பேரும் சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுபோல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பதாகவும், தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்: மாநில உரிமை பறிப்பு?

ஏற்கனவே சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 2 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை, திருச்சி போன்ற சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.