News
நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் டிடிவி தினகரன்!
சட்டமன்ற தேர்தல் அதற்கான நடைபெற உள்ள நிலையில் ஏற்பாடுகள் தமிழகத்தில் மிகவும் பயங்கரமான நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கூட்டணியில் பாஜக கட்சியில் உள்ளது .மேலும் அதற்கு போட்டியாக எதிர்க்கட்சியான திமுக கட்சியும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் அதற்கான வேட்பாளர்கள் பட்டியலையும், கழக செயலாளர் டி டி வி தினகரன் வெளியிட்டார். மேலும் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் அவர் அதிமுக தேர்தல் அறிக்கையில் எத்தனை நிறைவேற்றியது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். பத்து வருடங்களாக தவிர்க்கும் திமுக கையில் ஆட்சி கிடைத்தால் மக்களின் நிலைமை என்னவாகும் எனவும் அவர் கூறினார்.மேலும் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் அறிக்கையை விடுவதாகவும் அவர் கூறினார்
