Connect with us

டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது!! மருத்துவமனை தாக்கல்!!

டிடிவி தினகரன்

தமிழகம்

டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது!! மருத்துவமனை தாக்கல்!!

கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது  வாடிக்கையாக இருந்து வருகிறது.  அதன் படி,  இன்றைய தினத்தில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

இத்தகைய செய்தியானது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உணவு ஒவ்வாமை பிரச்சனையால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதோடு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

download

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top