Connect with us

திருவண்ணாமலையில் டிடிவி மகள் திருமணம்: சிவாஜி குடும்பத்தினர் ஆசி!

Tamil Nadu

திருவண்ணாமலையில் டிடிவி மகள் திருமணம்: சிவாஜி குடும்பத்தினர் ஆசி!

23831f720789a9ef1aeb88a81ebc9c90

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் மகள் திருமணம் இன்று திருவண்ணாமலையில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு பல அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்

933b0cee6679c0b11a5c476d75e15dde

டிடிவி தினகரன் அவர்களின் மகள் ஜெய ஹரிணி என்பவருக்கும் துளசி அய்யா வாண்டையார் அவர்களின் பேரன் ராமநாத வாண்டையார் அவர்களுக்கும் இன்று காலை திருவண்ணாமலையில் உள்ள திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக திருமணம் நடைபெற்றது

இந்த திருமணத்தில் சசிகலா கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார். மேலும் இந்த திருமணத்தில் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் குடும்பத்துடன் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 

c174095cd114e2fb0a0250cf914fb4fa

இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பல அரசியல் கட்சி தலைவர்கள் டிடிவி மகள் திருமணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top