இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும்!-வானிலை ஆய்வு மையம்;

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைவிட தை பிறந்தால் வெயில் தான் அதிகமாக இருக்கும் என்பதே உண்மையாகும். இந்த நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்று கூறியுள்ளது.

அதன்படி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி மற்றும் 18ம் தேதியில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் நவம்பர் மாதம் இருந்த வட கிழக்கு பருவமழையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து விட்டது என்பது கண்முன்னே தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment