Connect with us

அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!! தமிழகத்தில் நாளை வரை வறண்ட வானிலை!!

dry weather 1

தமிழகம்

அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!! தமிழகத்தில் நாளை வரை வறண்ட வானிலை!!

அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!! தமிழகத்தில் நாளை வரை வறண்ட வானிலை!!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிகழ்வதாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வறண்ட வானிலை நிலவும் என்று கூறியுள்ளது.

அதன்படி நாளை வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தலைநகர் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மார்ச் 19ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top