பிப்ரவரி 21 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துடங்கியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (பிப்ரவரி 17) முதல் பிப்ரவரி 21ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.

காரைக்கால், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய சிக்கல்களை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு சிறப்பு குழு !

அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்சம் 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காலை பனி மூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.