Connect with us

போதையில் தள்ளாடிய இளம்பெண்! வைரலாகும் வீடியோ!!

women

செய்திகள்

போதையில் தள்ளாடிய இளம்பெண்! வைரலாகும் வீடியோ!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அதிகளவில் போதைப்பொருள் பயன்பாடு என்பது அதிகமாக இருப்பதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில் இளம்பெண் ஒருவர் போதையில் தள்ளாடியபடி, நடக்க முடியாமல் தள்ளாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் அடுத்த மக்பூல்புராவில், இளம்பெண் ஒருவர் சாலையில் நின்று கொண்டு குணிந்தபடி நகர முடியாமல் திண்டாடியுள்ளார். இதனைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் செல்போன்களில் வீடியோ எடுக்க தொடங்கியுள்ளனர்.

அதே சமயம் அந்த பெண் போதையில் நகர முடியாமல் தள்ளாடியதாக கூறப்படுகிறது. சீக்கியர்களின் புனித நகரமான மக்பூல்புராவில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top