மதுவுக்கு அடிமையான போதை டீச்சர்: களத்தில் இறங்கிய அதிகாரிகள்!!

கர்நாடகாவில் குடிபோதையில் மாணவர்களுக்கு பாடம் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் துமாகூர் பகுதியில்அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியில் ஆசிரியராக கங்கா லக்ஷ்ம்மா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் மதுவிற்கு அடிமையானதாக தெரிகிறது.

இதனால் பள்ளியில் மதுபாட்டிலைக் எடுத்து வந்து மது அருந்தியபடி பாடம் நடத்தி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அப்போது கங்கா லக்ஷ்ம்மா அவர்கள் கண்டித்துள்ளனர்.

இருப்பினும் அவர் அலட்சியமாக இருந்து பாடம் நடத்தி வந்துள்ளார். பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதன் படி, கங்கா லக்ஷ்மாவின் வகுப்பறைக்கு சென்று சோதனை செய்தனர். அதில்மேசைப் பெட்டியில் மதுபாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment