குடிமகன்களே உஷார்; இன்று முதல் சரக்கு அடிச்சிட்டு வண்டி ஓட்டுனா என்ன தண்டனை தெரியுமா?

Drunk And Drive வாகன ஓட்டுபவர்கள் புகைப்படம் மற்றும் லோகேசனுடன் கூடிய புதிய வகை அபராத ரசீது வழங்கும் ப்ரீத் அனலைசர் மதுரையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு தேவையான செலவீனகளுக்காக ஓரு கோடியே 2லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு தேவையான 30லட்சம் மதிப்பிலான மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்கும் 50 புதியவகை ப்ரீத் அனலைசர், ஒளிரும் பாட்டன் லைட்டுகள், ரிப்ளெக்டிவ் ஜாக்கெட், கையுறை மற்றும் ப்ளாஸ்டிக் பேரிகாட்கள் உள்ளிட்ட உபகரணங்களை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினார்.

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள புதியவகை ப்ரீத் அனலைசரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் போது ஆக்டிவ் மோட்,பாசிவ் மோட் என இரண்டு வகைகளில் சோதனை நடத்தப்படும் அதன்படி சோதனைக்கு ஒத்துழைக்காத வாகன ஓட்டிகளின் பாசிவ் மோட் மூலமாக வாகன ஓட்டியின் வாயின் அருகில் கொண்டு சென்றாலே மது அருந்தியுள்ளாரா என்பது குறித்து அறிந்துகொள்ள முடியும் ,

மேலும் ஆக்டிவ் மோட் மூலமாக ப்ரீத் அனலைசரில் ஊதும்போது வாகன ஓட்டியின் முகத்தை புகைப்படம் எடுப்பதோடு, லொகேஷன் போன்ற முழு விவரங்களுடன் அபராத ரசீது கிடைக்கும் இதனை நீதிமன்றத்தில் சமர்பித்து நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் அதி நவீன ப்ரீத் அனலைசராக பயன்படுத்தபடவுள்ளது.

இந்த புதிய வகை ப்ரீத் அனலைசர் இன்று முதல் செயல்படுத்தப்படவுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆணையர் போக்குவரத்து காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு கருதி சாலைகளில் நடுவில் சென்று வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.