பிரதமர் மோடி தற்போது மணிப்பூர் சென்றுள்ளார் மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பாரம்பரிய கலைஞர்களை சந்தித்துள்ளார்.
பொதுவாக பிரதமர் மோடி அவர்கள் எங்கு சென்று எது செய்தாலும் நெட்டிசன்களுக்கு பேசு பொருளாக இருக்கும் அவர் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசித்தபோது அதையே இன்னும் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள பாரம்பரிய கலைஞர்களுடன் டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்துள்ளார்.
அவர்களுடன் வீடியோ எடுத்தும் பிரதமர் மகிழ்ந்துள்ளார்.
இதனால் பிரதமர் தங்களுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்ததை டிரம்ஸ் கலைஞர்கள் பெருமையாக கருதுகின்றனர்.
சும்மா சொல்லக்கூடாது டிரம்ஸ் என்றால் பிரதமர் மோடி நன்றாகவே வாசிக்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு பிரதமர் டிரம்ஸ் வாசிக்கும் வீடியோ இணையத்தை சுற்றி வரும் என்பதில் ஐயமில்லை.
Memorable moments from Manipur! Watch… pic.twitter.com/zj3ORmMJG9
— Narendra Modi (@narendramodi) January 4, 2022