கேரளாவில் Whatsapp மூலம் போதை பொருள் விற்பனை செய்த கணவன் மனைவி இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டதை சேர்ந்த தம்பதியினர் Whatsapp மூலம் போதை பொருட்களை பெங்களூரில் இருந்து கன்னூருக்கு கொரியர் அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் சம்பந்தப்பட்ட போலீசார் கொரியர் நிறுவனத்திற்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கொரியர் நிறுவனத்திற்கு பார்சலில் வந்த போதை பொருளை வாங்க வந்த தம்பதியினரை கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 1.5 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.