Connect with us

ரூ.11 கோடி மதிப்புடைய போதை மருந்து கடத்தல்: அயன் சினிமா பாணியில் ரீலை மிஞ்சிய ரியல் சம்பவம்!!

201912150252308522 From the international drug gang Rs1300 crores of drugs SECVPF

தமிழகம்

ரூ.11 கோடி மதிப்புடைய போதை மருந்து கடத்தல்: அயன் சினிமா பாணியில் ரீலை மிஞ்சிய ரியல் சம்பவம்!!

அயன் படத்தில் வருவது போன்று கேப்சூலாக விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்த கொகைன் போதைப்பொருள் ஹைதராபாத் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 21- ஆம் தேதி ஜோகன்ஸ்மோக்கில் இருந்து துயாய் வழியாக ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் ஏர்லைன் விமானம் ஒன்று வந்துள்ளது. அதில் ஏராளமான பயணிகள் வந்துள்ளனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர்.

அப்போது தான்சானியா நாட்டை சேர்ந்த ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விமான நிலையத்தில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர் வயிற்றுக்குள் கேப்சூல் வடிவில் மறைத்து கொகைன் பொருள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் மூலம் அவர் வயிற்றிலிருந்து 79 கொகைன் கேப்சூல் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 11 கோடியே 57 லட்சம் என தெரியவந்தது.

அந்த நபரை விசாரிததில் அவர் தான்சானியா நாட்டில் இருந்து போதைப்பொருள் கடுத்தும் கும்பல் பிரிட்டோரியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு பயணத்தை தொடங்கும் முன் அங்கு கொகைன் கேப்சூல் விழுங்கியது தெரியவந்தது.

இந்தியாவில் யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகள் விசாரித்தபோது முகம் தெரியாத நபர் ஒருவர் தான் தங்கியிருக்கும் இடத்தில் வந்து ஒரு சில நாட்களில் வாங்கிசெல்வார் என தெரிவித்தார். இதையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top