சினிமா பாணியில் போதைப்பொருள் கடத்தல்: 3 பேர் கைது!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம்புலன்சில் போதை பொருள் கடத்தி சென்ற 3 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே போதை பொருள் கடத்தல் விவகாரம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் தாப்பர் என்ற பகுதியில் அம்பாலா- சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அந்த வழியே வந்த ஆம்புலன்சை நிறுத்தி சோதனை செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர், முதலுதவிக்கு தேவையானவைகள் எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வாகனத்தில் ஏறி பார்த்தனர். அப்போது போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் சோதனை நடத்தியதில் 10 முறை இதுபோல் போதைப்பொருள் கடத்தியதாகவும், தற்போது 10 கிலோ போதைப்பொருள் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment