18 குழந்தைகள் பலி! பிரபல நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தம்.!!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஆய்வக பரிசோதனையில் எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருந்ததாக ஆராய்ட்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

அந்த மனசு தான் சார் கடவுள்.. விபத்தில் சிக்கியவருக்கு இறையன்பு உதவி..!!

இதன் காரணமாக நிறுவனன் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் போன்ற மருந்துகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக உஸ்பெஸ்கிதான் சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது.

அதே சமயம் நிறுவனத்திற்கு இந்தியாவில் மருந்து தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், மருந்து நிறுவனம் நொய்டாவில் இருந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

அடுத்த 3 நாட்கள்! வானிலை மையம் நியூ அப்டேட்..!!

இதனால் நொய்டா மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதே போல் இருமல் மருந்து வேறு எந்தெந்த நாடுகள், மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.