News
மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அதிரடி விசாரணை! 82 நிறுவனங்கள் போலி சனிடைசர்!
மக்கள் மத்தியில் தற்போது பேசப்படும் வாய் மொழியாக மாறியது ஆட்கொல்லி நோயான கொரோனா.இந்தியாவில் 2020 ஆம் ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் வர தொடங்கியது. ஆனால் இந்திய அரசின் தைரியமான செயலாலும் துணிகரமான முழு ஊரடங்கு திட்டத்தால் கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நோயின் தாக்கம் ஆனது கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் இந்தியாவில் கொரோனா சில வாரங்களாக மீண்டும் உயிர் பெற்றது போன்று அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது.

குறிப்பாக இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் நோயின் தாக்கம் வீரியம் உள்ளதாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்திலும் கொரோனா நோயின் தாக்கம் ஆனது மிகவும் வீரியம் உள்ளதாக காணப்படுகிறது. மேலும் பல கட்டுப்பாட்டு விதிகளை விதித்திருந்தது. முக கவசம் அணிவது கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றையும் அறிவித்திருந்தது. கண்ணுக்கு தெரியாத இந்த நோய்க்கிருமி உடன் முக கவசம் அணிவது மூலம் மட்டுமில்லாமல் சனிடைசர் அதன்மூலம் கைகளை சுத்தம் செய்வதும் கொரோனாக்கு எதிராக பின்பற்றப்படுகிறது.
இதன் மத்தியில் இந்த சானிடைசர்களிலும் போலி சானிடைசர் கள் தயாரிப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் போலி சானிடைசர்களை தயாரித்து விற்றதாக 82 நிறுவனங்கள் மீது மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அதிரடி விசாரணையில் மேற்கொண்டுள்ளது. மேலும் அவர்கள் தமிழகத்தில் தரமற்ற மற்றும் போலி சானிடைசர்களை விட்டதாகவும் அந்த 82 நிறுவனங்களின் மீது தற்போது விசாரணை நடைபெறுகிறது.
