மகளிடம் அத்துமீறிய போதை தந்தை: மனைவி எடுத்த அதிரடி முடிவு!!
சென்னை துரைப்பாக்கம் எழில் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் முஜிப்- சுசிலா தம்பதியினர். இவர்களுக்கு சுமித்திரா என்ற மகள் உள்ளார். இவர் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சுசிலா வீட்டு வேலை செய்ய சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது வீட்டில் இருந்த மகளிடம் முஜிப் குடித்துவிட்டு மதுபோதையில் சுமித்திராவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த சுசிலாவிடம் சுமித்திரா நடந்தை கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுசிலா கணவரை தாக்கியுள்ளார்.
பின்னர் கண்ணகி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் முஜிப்பை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததை ஏற்றுகொண்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
