செல்போன் டவரில் போதை ஆசாமி அட்ராசிட்டி!! கோவையில் பரபரப்பு!!

கோவையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்தி புரம் அடுத்துள்ள காமாச்சி புரம் பகுதியில் இருக்கும் செல்போன் டவரில் போதை ஆசாமி ஒருவர் சுமார் 3 மணி நேரமாக தற்கொலை செய்துகொள்வதாக பொதுமக்களிடம் மிரட்டல் விடுத்திருந்தார்.

அரசு கேபிள் டிவி சேவை முடக்கம்: அரசு தரப்பில் விளக்கம்!!

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் போதை ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பதும் கோவையில் கூலிவேலை செய்துவந்துள்ளதாக தெரிகிறது. மதுபோதையில் டவர் மீது ஏறியுள்ளதாக கூறப்படுகிறது.

உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி: துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை!!

மேலும், மதுபோதையில் டவர் மீது ஏறி அட்ராசிட்டியில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.