மருந்துகளை போதைக்கு பயன்படுத்துவது தீவிர குற்றம்!!-நீதிபதி;

பல இடங்களில் போதை மாத்திரைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. மேலும் பலரும் மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவது வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு நீதிபதி அதிரடி உத்தரவு ஒன்றினை அறிவித்துள்ளார்.

அதன்படி மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் மருந்துகளை சட்டவிரோதமாக போதைக்கு பயன்படுத்துவது தீவிர குற்றமாகும் என்று கூறியுள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மெடிக்கல் நடத்திவரும் என் மீது போதை ஊசி விற்றதாக வழக்கு பதிவாகியுள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கூறியுள்ளார். மனுதாரரின் கடையில் போதை தரக்கூடிய மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட்டு வந்துள்ளன என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கருத்தினை முன்வைத்துள்ளார்.

மேலும் போதை தரும் மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட்ட வழக்கில் ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பு கூறி உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளதால் மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் திட்டவட்டமாக வாதிட்டுள்ளார்.

அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி இளங்கோவன் மனுதாரரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment