நம் தமிழகத்தில் பல திட்டங்கள் இலவச திட்டமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரேஷன் கடைகளில் அரிசி இலவசம் மகளிர்க்கு நகர்புற பேருந்துகளில் பயண கட்டணம் இலவசம் உள்ளிட்டவைகள் நடைமுறையில் உள்ளன.
ஒரு சில இடங்களில் இலவசங்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுக இலவசங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
அதன்படி இலவசங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக எழுத்து பூர்வமான வாதம் தாக்கல் செய்துள்ளது. இலவச திட்டங்கள் அனைத்தும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக பங்களித்துள்ளது என்று திமுக கூறியுள்ளது.
1956 ஆம் ஆண்டு காமராஜரால் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட மத்திய உணவு திட்டம் இன்று உலக அளவில் முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டி பாதிப்பு உள்ளது.
மகளிருக்கு பேருந்து இலவச பயணம் என்ற திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் கூறுகிறது. மேலும் இலவச மின்சாரம் மூலம் பல லட்சம் விவசாயிகள் பயன் அடைகின்றனர் என்று திமுக எழுத்து பூர்வமான வாதம் புரிந்துள்ளது.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்த பல திட்டங்கள் சமூக சமத்துவம் இல்லாத நிலையை மாற்றி உள்ளது என்றும் திமுக கூறியது.