
News
அட்ராசக்க..! ட்ரோன் மூலம் பார்சல்… அசத்திய அஞ்சல் துறை…
மன்னர் கால ஆட்சி காலத்தில் அரசர்கள் கடிதங்களை அனுப்புவதற்கு புறாக்களை பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப தபால் முறை வந்து தற்போது பெரும்பாலானவற்றை அனுப்புவதற்கு தபால் துறை பெரிதும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில் தபால் துறையை பின்பற்றி மிகவும் சுலபம் ஆக்குவதற்காக ட்ரோன் மூலம் சேவையை தொடங்க இருப்பதாக இந்திய அஞ்சல் துறை கூறியுள்ளது.
அந்த வகையில் முதன் முறையாக ட்ரோன் மூலம் பார்சல் சேவையை தொடங்கி சாதனைப்படைத்துள்ளது இந்திய அஞ்சல் துறை. குஜராத் மாநிலத்தில் உள்ள ஹபே என்ற கிராமத்திற்கு ட்ரோன் மூலம் பார்சல் சேவை தொடங்கி வெற்றி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சாதனையில் சுமார் 25 நிமிடத்தில் 46 கிலோமீட்டர் வரைக்கும் இலக்கை அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் வரும் காலக்கட்டத்தில் ட்ரோன்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும் என இந்திய அஞ்சல் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
