3 கிலோ கஞ்சாவை கடத்திய ட்ரோன் .. பாகிஸ்தான் பார்டரில் பரபரப்பு

இந்திய பாகிஸ்தான் எல்லையில் 3 கிலோ கஞ்சாவை கடத்த பயன்படுத்திய மர்ம நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் ட்ரோன் ஒன்று மர்மமாக பறந்து கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர். இதனையடுத்து அந்த ட்ரோன் கீழே இறங்கிய நிலையில் அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்திய பாகிஸ்தான் எல்லையில் இந்த குற்றம் நடந்துள்ளதால் இதனை செய்தது இந்தியரா அல்லது பாகிஸ்தானை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த ட்ரோன் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கஞ்சாவை கடத்தி வருவது அதிகரித்து வருவதாகவும் இதனை அடுத்து எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பினையும் மீறி தற்போது ட்ரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் கஞ்சாவை கடத்திய மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.