Connect with us

ஓட்டுநர்கள், நடத்துநர்களே உஷார்! – போக்குவரத்து துறை எச்சரிக்கை;;

Capture 8

தமிழகம்

ஓட்டுநர்கள், நடத்துநர்களே உஷார்! – போக்குவரத்து துறை எச்சரிக்கை;;

சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிக்கும்போது நடத்துனர்கள் மரியாதை குறைவாக நடத்துவதாக அவ்வப்போது போக்குவரத்து துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நடைமுறைகளை கட்டாயம் கடைபிடித்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் ஓட்டுனர்கள் குறித்த நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவராக பேருந்திற்காக நிற்கும் போது அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்துகளை நிறுத்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே வயது முதிர்ந்தவர்கள் பேருந்தில் இருக்கும்போது அவர்களுக்கு சீட்டில் அமரும்படி செய்ய வேண்டும் என்றும் பயணிகள் இறங்கி விட்டார்களா என்பதை அறிந்த உடன் பேருந்தை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து புறப்பட்ட பின் பயணிகள் ஓடிவந்தாள் பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top