News
ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் தடுப்பூசி போட வேண்டும் என்பது கட்டாயமில்லை!
மக்களிடையே பல்வேறு இன்னல்களை உருவாக்கிக் கொண்டுள்ள நோயாக கொரோனா காணப்படுகிறது. இந்தக் கொரோனா நோயானது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. ஆனால் இந்திய அரசின் முழு ஊரடங்கு திட்டத்தினால் இந்நோயானது கடந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கம் ஆனது இந்தியாவில் மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டெல்லி மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மேலும் இதற்காக பல்வேறு மாநில அரசுகள் தங்களது மாநிலங்களில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். எனினும் ஒரு சில மாநிலங்களில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். மேலும் தமிழகத்திலும் சில தினங்களுக்கு முன்பாக சில கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன. நேற்றைய தினம் முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டன. இதனால் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து கழகம் ஆனது இரவு நேர போக்குவரத்து பயணங்களை ரத்து செய்தது. மேலும் மாற்று பேருந்துகளையும் பகலில் இயக்குகிறது .
எனினும் இன்று காலை போக்குவரத்து கழக செயலாளர் இரவு ஊரடங்கு பற்றியும் போக்குவரத்தின் வருவாய் பற்றியும் கூறியிருந்தார். அதன்படி போக்குவரத்து வருவாய் ஆனது 15 கோடி வரை கண்டதாகக் கூறினார். மேலும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் அனைவரும்கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் கூறினார். மேலும் முன்னதாக சுற்றறிக்கையில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்றிருந்த நிலையில் தற்போது போக்குவரத்து செயலாளர் கட்டாயம் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
