ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்: ரூ.1,620 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் போக்குவரத்து பயன்பாடு என்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக 118 கி.மீட்டர் தொலைவிற்கு ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பீட்டுல் பணிகளானது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயிலானது ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் செயல்படு மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்களை ஒவ்வொரு நிறுவனத்திடமும் வழங்கி வருகிறது.

ஜார்க்கண்டில் பயங்கரம்! உறவினர் தலையுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்..!!

தற்போது ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ இரயில் இயக்க ரூ.1,620 கோடி மதிப்பில் அதீநவீன சிக்னல் மற்றும் ரயில் இயக்க கட்டுப்பாடு பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் உள்ளிட்ட 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சகட்ட பரபரப்பு…. பாஜகவிலிருந்து சூர்யா சிவா விலகல்!!

அதே போல் முதற்கட்ட சோதனை நடத்தப்பட்ட பிறகு ரயில்களானது வருகின்ற 2027-ம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ஒரு நிமிடம் 30 வினாடிகள் ஆள் இல்லாமல் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.