ஓட்டுனருக்கு மாரடைப்பு! கண்ட்ரோல் இழந்த பேருந்து… சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

வட மாநிலங்களை பொருத்தவரையில் கடந்த சில நாட்களாகவே விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரசு பேருந்தின் ஓட்டுனரருக்கு நெஞ்சுவலியின் போது சிக்கல்களுக்காக காத்திருந்த வாகன ஓட்டிகள் மீது ஏறி இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரின் கோஹல்பூர் பகுதியில் சாலையில் சிக்னல் போட்டதால் இரு சக்கர வாகனம் காத்திருந்தது. அப்போது அரசு பேருந்தின் ஓட்டுனர் சாரதி என்பருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ரெடியா இருங்க!! டிச.7-ம் தேதி 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!!

இதில் சுயநினைவை இழந்த நிலையில் சிக்னலில் காத்திருந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை தரதரவென இழுந்து சென்றது. இந்த விபத்தில் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே போல் ஓட்டுனரை மீட்ட போக்குவரத்து போலீசார் மருத்துவ மனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்த விட்டதாக தெரிவித்து உள்ளார்.

மீண்டும் சோகம்!! சென்னையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

இந்நிலையில் விபத்தில் 2 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.