சரக்கு வாங்க சாரை சாரையாக குவிந்த ”குடி” மகன்கள்!!!
தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதியில் உள்ளாட்சி தேர்ததலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த நிலையூரில் 5410 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை வழக்கம்போல் செயல்பட்டது.
இதில் டாஸ்மாக் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கடை திறக்கப்பட்டுள்ளதால் திருவிழா கூட்டம் போல் குடிமகன்கள் சரக்கு வாங்க குவிந்தனர்.
இந்த தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தும் அந்த கூட்டத்தை கலைக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
