காப்பி குடித்தால் இதய நோய் வருமா? அபாய எச்சரிக்கை!

நம் வீட்டில் விருந்தினராக வருபவருக்கு நாம் முதலில் பருக கொடுப்பது காப்பி அல்லது டீ தான். நம் ஊரில் எந்த வசதி இருக்கிறதோ இல்லையோ 4 தெருவும் நாற்பது காப்பி கடைகள் இருக்கும். அந்த அளவிற்கு நம்மையும் காப்பியையும் பிரிக்க முடியாது.

நாம் தினமும் முழித்த உடன் குடிக்கும் பொருளாக காப்பி மாறி விட்டது. அதிலும் சிலர் கோவமாக இருக்கும் போது குழப்பமாக இருக்கும் போது சுறுசுப்பாக மாற என நினைக்கும் நேரத்தில் எல்லாம் காப்பி இடைவேளை தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 5 முதல் 10 வரை காப்பி குடிக்கும் நபர்களும் நம்முடன் தான் உள்ளார்கள்.

அதிலும் ஸ்ட்ரோங்கான காப்பி என்றால் அதற்க்கு தனி ரசிகர்களே உள்ளனர். கொதிக்கும் சூட்டில் குடித்தால் தான் திருப்தி என கூறும் நபர்களும் உண்டு.

தற்போழுது காப்பி குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தினந்தோறும் இரண்டு கப் காப்பி அருந்துவது இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கலாம் என்று மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் கடுமையான உயர் இரத்த அழுத்தம் அதாவது 160/100 mmhg அல்லது அதற்க்கு மேல் உள்ளவர்கள் 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட கப் காப்பி அருந்தினால் இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது என்று கூறுகிறது.

#Video விபத்தில் சிக்கிய ராதாகிருஷ்ணன் ; நொறுங்கிய கார் – பரபரப்பு காட்சிகள்!

உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு காப்பியின் நேர்மறையான விளைவுகளை பொருந்துமா? அவர்கள் மீது கிரீன் டீயின் தாக்கம் என்ன? என்று தெளிவு படுத்தும் நோக்கில் ஆய்வு மேற்கொள்ள பட்டதாக ஜப்பானில் உள்ள தேசிய சுகாதார மருத்துவ மையத்தின் இயக்குனர் ஹிரோயாசு ஐசோ தனது ஆய்வில் விளக்கி உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.