மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம்.. நாடு எங்கு செல்கிறது… ஐகோர்ட் கிளை வேதனை!!

தமிழகத்தில் கடந்த சில பள்ளி மாணவர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தடுக்கும் வகையில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்கக் வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருவதாக கூறினர்.

அதோடு நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை என கூறினர். இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும், இல்லாவிட்டால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என
உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்தது. மேலும், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment