திருட வந்த வீட்டில் விடிய விடிய மது குடித்து விட்டு விபரீத முடிவு!!

பெங்களூரில் பூட்டிய வீட்டில் கதவை உடைத்து சென்ற திருடன் வயிறு முட்ட மது அருந்திவிட்டு, உணவு சமைத்து சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் தொழிலதிபர் ராய் குடும்பத்தினர் வெளிநாடு சென்றுவிட்டு கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பியதாக தெரிகிறது. அப்போது வீட்டை திறக்க முயற்சித்தப்போது வீட்டை திறக்க முடியவில்லை.

தீபாவளி! 2 நாட்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை..!!!

இதனால் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் உள்ளே சென்றபோது மர்ம நபர் ஒருவர் பூஜை அறையில் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கடந்த புதன்கிழமை திருடன் உள்ளே நுழைந்துள்ளார். அப்போது விடிய விடிய மது அருந்தி, உணவு சாப்பிட்டு விட்டு பூஜை அறைக்கு சென்று தற்கொலை செய்தது அம்பலமானது.

குஷியோ குஷி!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

பின்னர் போலீசார் விசாரணை நடத்தியல் அசாம் மாநிலத்தை சேர்ந்த திலீப் குமார் (46) என்பதும் இவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment