எதுவாக இருந்தாலும் சரி வெல்வது பெண் கல்வியாக இருக்க வேண்டும்! கல்விக்கு உடை தடையாக இருக்கக்கூடாது!!: அன்புமணி

கர்நாடகாவில் மாணவர்களுக்கு இடையே பெரும் கலவரமே நடந்து கொண்டு வருகிறது. ஏனென்றால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஹிஜாப் அணிவது பற்றி கருத்து கூறியுள்ளார். சர்ச்சைகள் தேவையற்றவை; கல்விக்கு உடை என்பது தடையாக இருக்க கூடாது என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ANBUMANIRAMADOSS

கர்நாடகாவில் குண்டப்பூர், உடுப்பி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடையால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உடை  சுதந்திரத்தை மதிக்காமல் நடத்தும் போராட்டங்களும் வெறுப்புகளும் தேவையற்றவை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அமைதியை குலைக்கும் செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஆடைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் வெறுப்பை விதைத்து விடக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ஹிஜாப் சர்ச்சை, கல்வியை சிதைத்து விடக்கூடாது என்பதுதான் பாமகவின் கவலை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதிக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இஸ்லாமிய பெண்களுக்கு இப்போதுதான் கல்வி வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி உள்ளன என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

எதுவாக இருந்தாலும் வெல்வது பெண் கல்வியாக இருக்கவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கல்வி நிறுவனங்களில் கல்வி, அமைதி, நல்லிணக்கம் மட்டுமே கோலோச்ச வேண்டுமென்று, அரசு இதை உறுதி செய்க! என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment