
செய்திகள்
குடியரசுத் தலைவர் பதவியை தட்டி தூக்கினார் திரௌபதி முர்மு!!
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தற்போது வரை 53.12% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்றைய தினத்தில் தொடங்கியது.
அந்த வகையில் முதல் சுற்றில் யஷ்வந்த் சின்ஹா வீழ்த்தி திரெளபதி முர்மு முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே போல் இரண்டாம் கட்ட சுற்றிலும் திரெளபதி முர்மு முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில் 50% வாக்குகளை கடந்த சூழலில் தற்போது வரையில் 53.12% வாக்குகளை பெற்று முன்னிலை இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதால் அக்கட்சியை சேர்ந்தவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
