
Tamil Nadu
அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை: எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களாகவே பால் விலை, மளிகைப்பொருட்கள் விலை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த சூழலில் கடந்த 4 மாதங்களாவே எல்பிஜி உற்பத்திக்கு ஏற்றவாறு மாதங்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையினை உயர்த்துவது வழக்கம்.
அந்த வகையில் ஜூன் மாதம் பிறந்திருக்கும் சூழலில் சிலிண்டர் விலையில் நிர்ணயம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. அந்த வகையில் 1018.50 என்ற அளவில் விற்பனையாகிறது.
ஆனால் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.135 குறைத்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் மட்டும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2373ஆக விற்பனையாகுவது குறிப்பிடத்தக்கது.
