சிம்புவுக்கு கல்யாணம் ..! கிரீன் சிக்னல் கொடுத்த டி.ஆர்.. பொண்ணு யாருன்னு தெரியுமா ?
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவர் நடித்த ஈஸ்வர் திரைப்படமானது தோல்வியை சந்தித்ததால் படவாய்ப்புகள் ஏதுமின்றி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த மாநாடு திரைப்படமானது வசூல் ரீதியில் மாஸ் காட்டியதால் அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிய தொடங்கியது.
இதனிடையே தற்போது ஹாட்ஸ்டாரில் ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை தொகுப்பாளராக பங்கேற்ற சிம்புவிடம் போட்டியாளர் தாமரை, எப்போ திருமணம் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சிம்பு நான் நிம்மதியாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என கூறி வழக்கம் போல் சமாளித்துவிட்டார்.
இந்த சூழலில் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் சோசியல் மீடியாவில் வந்தன. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
தற்போது சிம்பு – நிதி அகர்வாலின் காதலுக்கு சிம்புவின் குடும்பத்தினர் காதலுக்கு சம்பதித்து விட்டதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
