
பொழுதுபோக்கு
ஆஸ்பத்திரியில் டி.ஆர் ராஜேந்தர்.. உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட தகவல் ??..
டி.ஆர் ராஜேந்தர் அவர்கள் 1980 களில் நிறைய படங்களை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் பாடகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர், திரைப்பட விநியோகஸ்தர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை பெற்றவர்.இவரது மகன் சிம்பு முன்னணி நாயகர்களில் ஒருவராக வளம் வருகிறார்.
இந்நிலையில் டி ராஜேந்தருக்கு கடந்த 4 நாட்களாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் .அவர் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாத டி.ஆர் அவருக்கு இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது
இருப்பினும் மேல் சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது மருத்துவர்கள் வேண்டாம் என கூறியுள்ளார்களாம்.
தலை நிறைய மல்லிகை பூ.. கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த நயன்தாரா!!
டி.ராஜேந்தரின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதுடன் அவரின் உடல் நிலை சரியாகி மீண்டு வர பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நடிகர் சிம்பு தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடலாம் , அவ்வாறு இல்லையெனில் போரூர் மருத்துவமனை டி.ஆர் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
