சூப்பர் ஹிட் படங்கள்ல நடிச்சும் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிரபல நடிகை.. 30 வருஷம் கழிச்சு இப்ப ரஜினி படத்துல ரீ என்ட்ரி..

டி ராஜேந்தர் இயக்கி நடித்த ‘உறவை காத்த கிளி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஜீவிதா. கடந்த 1984 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இரண்டு வேடங்களில் நடித்த ’உறவை காத்த கிளி’ என்ற திரைப்படத்தில் சரிதா மற்றும் ஜீவிதா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர். முதல் படத்திலேயே  அனுபவம் வாய்ந்த சரிதா உடன் ஜீவிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரது நடிப்பிற்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்திருந்தது.

முதல் படத்தின் வெற்றி காரணமாக அவர் தொடர்ந்து திரையுலகில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சுகமான ராகங்கள், வெற்றி கனி, செல்வி, பாடும் வானம்பாடி, நானே ராஜா நானே மந்திரி, இது எங்கள் ராஜ்ஜியம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அர்ஜுன் நடித்த எங்கள் குரல்,  ஆயிரம் கண்ணுடையாள், பிறந்தேன் வளர்ந்தேன், எனக்கு நானே நீதிபதி,  கண்ண தொறக்கணும் சாமி, மௌனம் கலைகிறது உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும் சிவகுமார், அர்ஜுன், சிவாஜி கணேசன், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஜீவிதா, தெலுங்கிலும் சில படங்களில் நாயகியாக தோன்றி உள்ளார். சுமார் ஆறு ஆண்டுகள் வரை திரைப்படங்களில் நடித்து வந்த ஜீவிதா, அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

jeevitha12 1

கடைசியாக தெலுங்கில் மகடு என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு அவர் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த ராஜசேகரை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர் நடிப்புலகில் இருந்து விலகி விட்டார் என்பதும் அவருக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர் என்பதும் இருவருமே தற்போது திரையுலகில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணம், குழந்தை என்ற பொறுப்பு வந்த பிறகு சுமார் 30 ஆண்டுகள் திரையுலகில் நடிக்காமல் இருந்த நிலையில் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் வெளிவந்த பின்னர் இன்னும் அதிக படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jeevitha2

திருமணத்திற்கு பின்னர்  நடிகையாக நடிக்கவில்லை என்றாலும் அவர்  ஒரு சில திரைப்படங்களை தயாரித்து இயக்கினார்.  தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சேது என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை அவர் தயாரித்து இயக்கினார். அதேபோல்  சூது கவ்வும்  உள்பட ஒரு சில படங்களின் ரீமேக் படங்களை தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஜீவிதா தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் அதுமட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.