Connect with us

வரதட்சணை கொடுமை!! பெண் சப் – இன்ஸ்பெக்டர் பரபரப்பு புகார்!!

Capture 62

தமிழகம்

வரதட்சணை கொடுமை!! பெண் சப் – இன்ஸ்பெக்டர் பரபரப்பு புகார்!!

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் வரதட்சணை கொடுமைகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வரதட்சணை கொடுமையால் உயிரிழப்புகள் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட தஞ்சை பெண் காவல் உதவி ஆய்வாளர், வரதட்சணை கொடுமை காரணமாக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புகழ்வேந்தன் – சசிரேகா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சசிரேகா பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புகழ்வேந்தன் வரதட்சணை கேட்டு சசிரேகாவை அடித்தும் துன்புறுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ளாத சசிரேகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் கணவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top