Connect with us

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்! எப்போது தெரியுமா?

vijay bd

பொழுதுபோக்கு

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்! எப்போது தெரியுமா?

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்க ,படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடிந்து விட்டது .இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

thalapathi 66 pic

இந்நிலையில் தளபதி 66 படத்தைப்பற்றிய அறிவிப்பை அடிக்கடி வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட இருக்கிறது. விஜய்யின் பிறந்த நாள் அன்று விஜய்யின் தயாரிப்பாளர்கள் பல திட்டங்களைப் தீட்டுவார்கள். அதுவும் இல்லாமல் எப்போதுமே விஜய்யின் பிறந்த நாளன்று தான் அவருடைய படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும்.

அதேபோல் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 22ஆம் தேதி அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் காத்துக்கொண்டுருக்கின்றனர். இந்நிலையில் அதே நாளில் விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.

 

 

thalapathi 67 3

அது என்னவென்றால் அடுத்து தளபதி 67 படத்திற்காக விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேரவுள்ளார். லோகேஷின் விக்ரம் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்து விஜய் 67 படத்திற்கான முதற்கட்ட பணிகளை லோகேஷ் தொடங்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தை எடுத்து முடிக்க ஆறு மாதம் மட்டுமே போதும் எனவும் குறிப்பிட்டுளார்.

விஜய் 67 படத்தின் ஷூட்டிங் இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க அனுக்கிருக்கிறார்கள். ஏற்கனவே சமந்தா விஜய் உடன் தெறி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி 169 படத்தில் இவரா! படத்தில் இவருக்கு என்ன கேரெக்ட்டர் தெரியுமா?

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top