மீனே வேண்டாம்; அனைத்து மீன்களின் விலையும் இருமடங்கு உயர்வு…!!

தற்போது வங்க கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடி தடை காலம் உள்ளது. ஏனென்றால் மீன் இனப்பெருக்க காலம் என்பதாலும் கடல் உயிரின பாதுகாப்பு கருதி அங்கு மீனவர்கள் 61 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடல் மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு, பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சங்கரா மீன் ஒரு கிலோ ரூபாய் 880க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வவ்வால் மீன்  900 ரூபாய்க்கும், கடம்பா மீன் ரூபாய் 900க்கும், இரால் ஒரு கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதன் விளைவாக இத்தகைய மீன்களின் விலை உயர்ந்ததாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment