Connect with us

இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

உயர்நீதிமன்றம்

தமிழகம்

இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பூகம்பமாக வெடித்திருக்கும் சூழலில் நேற்றைய தினத்தில் பொதுக்குழு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இருப்பினும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை தடைசெய்ய ஓபிஎஸ் தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற இபிஎஸ் அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் இரட்டை இலை சின்னத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள் இந்த வழக்கானது விளம்பரத்துக்காக தொடரப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கிற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top