Connect with us

மீண்டும் முடக்கப்படுமா இரட்டை இலை? வழக்கு இன்று விசாரணை!!

அதிமுக

தமிழகம்

மீண்டும் முடக்கப்படுமா இரட்டை இலை? வழக்கு இன்று விசாரணை!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு வருகின்ற அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் நிகழ்ந்து கொண்டு வருகிறது. ஏனென்றால் அதிமுகவின் இருந்தலைவர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே முரண்பாடான கருத்துக்கள் உருவாக்கி உள்ளது.

மேலும் பொதுக்குழு தொடர்பாக வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற  எடப்பாடி பழனிசாமி ரூபாய் 5000 கோடி செலவு செய்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். பதவியை கைப்பற்ற மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு வருகிறதாக தெரிகிறது.

ஏற்கனவே அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணத்தின் பின்பு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top