இந்தியாவில் இரட்டை சதமடித்த ஒமைக்ரான்! இதுவரை 12 மாநிலங்களில் பரவல்!!

தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றி இன்று உலகத்தில் உள்ள பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான்.  இதனால் இந்திய அரசாங்கம் வெளிநாட்டு பயணிகளுக்கு முறையான பரிசோதனை மேற்கொண்டது.

அவ்வாறு இருப்பினும் இந்தியாவிலும் பரவியது. ஆரம்ப காலகட்டத்தில் மெல்ல மெல்ல பரவ ஒமைக்ரான் தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. அதன்படி இந்தியாவில் 200 பேருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 12 மாநிலங்களில் ஒமைக்ரான்  பரவல் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 200 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 77 பேர் குணமடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் 54 பேருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் தெலுங்கானா மாநிலத்தில் 20 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது

கர்நாடகாவில் 19 பேருக்கும் ஒமைக்ரான்  பாதிப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பதினெட்டு பேர்க்கும், கேரளா மாநிலத்தில் 15 பேருக்கும், குஜராத் மாநிலத்தில் 14 பேருக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு பேருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. ஆந்திரா, தமிழகம், சண்டிகார், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment