Connect with us

கான்கிரீட் சாலை பரிதாபங்கள் : பைக், பைப்புக்கு அடுத்ததா கதவையும் விட்டு வைக்கல..!

Bike Bipe

தமிழகம்

கான்கிரீட் சாலை பரிதாபங்கள் : பைக், பைப்புக்கு அடுத்ததா கதவையும் விட்டு வைக்கல..!

கடலூரில் மழை நீர் கால்வாய் கட்டும் போது கான்கிரீட் கொட்டப்பட்ட கதவுகள் உடைத்து அகற்றப்பட்டன……

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரீட் சாலைகள் மற்றும் கால்வாய்கள் கட்டும்பொழுது அலட்சியமான முறையில் பைப்புகளை வைத்து மூடுவது, வாகனங்களை வைத்து மூடுவது, கதவுகளை வைத்து மூடுவது என பல்வேறு செயல்கள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புற வழியாக செல்லும் வழியில் உள்ள இரண்டு கதவுகளும் கான்கிரீட் போட்டு அடைக்கப்பட்டது. இதேபோல் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் கதவும் காங்கிரீட் கொட்டி மூடப்பட்டதால் திறக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது.

இது செய்தியாக வெளியான நிலையில் தற்போது இதனை உடைத்து எடுக்கும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர். பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்பு உள்ள இரண்டு கதவுகளும் காங்கிரீட் உடைக்கப்பட்டு தற்போது அகற்ற ப்பட்டது.

இதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்த கதவும் கான்கிரீட் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக செயல்படுவதால் ஒன்றுக்கு இரண்டு வேலையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top