Connect with us

தேர்தலில் வெற்றி பெற்றால் 21 வகையான மளிகைப் பொருட்கள் டோர் டெலிவரி!

groceries

தமிழகம்

தேர்தலில் வெற்றி பெற்றால் 21 வகையான மளிகைப் பொருட்கள் டோர் டெலிவரி!

தேர்தலில் வெற்றி பெற்றால் 21 வகையான மளிகைப் பொருட்கள் டோர் டெலிவரி!

இன்றைய தினத்தில் நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை முடிவுக்கு வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் தேர்தல் பரப்புரையை முடிக்கவேண்டும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் கடைசி நிமிடத்தில் தமிழகம் முழுவதும் அதிதீவிரமாக தேர்தல் பரப்புரை நிகழ்ந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆங்காங்கே விதவிதமான வாக்குறுதிகளை அள்ளிக் குவித்து மக்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர்.

அவற்றில் ஒன்றாக இன்று அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மளிகை பொருட்கள் டோர் டெலிவரி செய்வதாக கூறியுள்ளார். அதற்கான துண்டுச்சீட்டு அச்சடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அதன்படி திருவேற்காடு நகராட்சியின் 17 வது வார்டில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர் தான் வெற்றி பெற்றால் 21 வகையான மளிகைப் பொருட்கள் வீடு தேடி வரும் என்று அச்சிட்டு விநியோகம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 21 பொருட்கள் பட்டியல் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top