கவலைப்படாதீங்க ஓபிஎஸ்; உங்களுக்கு நாங்க இருக்கோம்! தென் மாவட்டங்களில் கொந்தளிப்பு!!

எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது பெரும் குழப்பம் நிலவுகிறது.அந்த குழப்பத்திற்கு முக்கிய காரணமாக உள்ளவர் சசிகலா என்றே கூறலாம். ஏனென்றால் சசிகலாவின் வருகை பின்னர் அதிமுக கட்சியில் பெரும் குழப்பமான சூழல் நிலவுகிறது.ஜே.சி.டி பிரபாகர்

அந்த குழப்பத்தின் மத்தியிலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா பற்றி கூறிய கருத்து மேலும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி சசிகலா அதிமுக கட்சியில் சேர்ப்பது குறித்து நேற்றையதினம் அதிமுகவினர் ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார்.

இதனால் தற்போது அதிமுக கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் உருவாகி உள்ளது. இந்த நிலையில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக ஜே.சி.டி பிரபாகர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து பன்னீர்செல்வம் கருத்தில் என்ன தவறு? என்று கேள்வி கேட்டுள்ளார். அவர் இன்றைய தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு பேட்டியளித்தார்.

அதன்படி பன்னீர்செல்வம் கருத்தை விமர்சித்து கேபி முனுசாமி அளித்த பேட்டியால் தென் மாவட்டங்களில் தற்போது கொந்தளிப்பு உருவாகி உள்ளது என்றும் ஜே.சி.டி பிரபாகர் கூறியுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment