Connect with us

சென்னை மக்களே வெயிலின் தாக்கமா? கவலையே வேண்டாம்; சூப்பரான வெதர் ரிப்போர்ட்..!!

in Chennai1

தமிழகம்

சென்னை மக்களே வெயிலின் தாக்கமா? கவலையே வேண்டாம்; சூப்பரான வெதர் ரிப்போர்ட்..!!

கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னை கடற்கரையோரம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் கன மழை பெய்து கொண்டு வருகிறது.

நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம் எச்சரிக்கை!

இந்நிலையில் சென்னைக்கு மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அங்குள்ள வரை மகிழ்ச்சிக்குள் ஆளாக்கி உள்ளது. அதன்படி சென்னையில் அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

ஏற்கனவே குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும் சோளிங்கநல்லூர், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்கள் இரவில் குளிர்ச்சியான சூழ்நிலையை உணர்கின்றனர்.

மேலும் நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top