பள்ளிகளை தூய்மை செய்ய எக்காரணம் கொண்டும் மாணவர்களை பயன்படுத்தக்கூடாது!!!

தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்கள் தான் சுத்தம் செய்யும் செயலினை ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் அதனை பள்ளி நிர்வாகம் பத்திரிகைகளில் வெளியிட்டு மாணவர்களின் இத்தகைய செயலினை பாராட்டி வரும்.

ஆனால் தற்போது பள்ளி கல்வித்துறை இவ்வாறு செய்யக்கூடாது என்று பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பள்ளிகளில் தூய்மைப்படுத்த பணிகளில் எக்காரணம் கொண்டும் படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.

மேலும் அந்தப் பணிகளுக்கு பள்ளிகளை தூய்மை செய்ய 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தலாம் என்றும் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. ஏற்கனவே 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை பற்றி தமிழகத்தில் முரண்பாடான கருத்துக்கள் நிலவி கொண்டுள்ள நிலையில் இவ்வாறு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது அத்தகைய கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment