பாஜக குறித்து அவதூறாக பேச வேண்டாம் – ஈபிஎஸ் அறிவுறுத்தல்!!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டமான இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கிச்சத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைப்பெற்று வருகிறது.

அப்போது பேசிய இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி தொடர்பாக தலைமை பார்த்துக்கொள்ளும் என கூறினார். அதே போல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு முழுவீச்சியில் தயாராக வேண்டும் என தெரிவித்தார்.

தாயின் கடைசி ஆசை! ஐசியூவில் நடைப்பெற்ற மகளின் திருமணம்..!!

இதனை தொடர்ந்து பாஜக கட்சி அதிமுகவை எந்தவிதத்திலும் கட்டுபடுத்தவில்லை எனவும் அக்கட்சியினர் அதிமுகவை வற்புறுத்தியதும் இல்லை என்றும் அவர்கள் பாஜகவின் கட்சி பணிகளை செய்கிறார்கள், நாம் நம்முடைய கட்சி பணிகளை செய்வோம் என தெரிவித்தார்.

கடந்த வாரம் திமுகவை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிரான போராட்டத்தினை சிறந்த முறையில் நடத்திய அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

குஷியோ குஷி!! TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு!!

அதே நேரத்தில் பாஜக குறித்து அவதூறாக பேச வேண்டாம் என இபிஎஸ் கூறியிருப்பது தற்போது நிலவி வரும் சூழலில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.